SuperTopAds

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இலங்கையில் 1வது செயற்கை மழை செயற்றிட்டம் தொடங்கப்பட்டது.

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இலங்கையில் 1வது செயற்கை மழை செயற்றிட்டம் தொடங்கப்பட்டது.

மத்திய மலைநாட்டின் நீரேந்தும் பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக செயற்கை மழையை ஏற்படுத்தும் செயற்திட்டம் இன்று ஆரம்பமாகியது

இதற்கமைய செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் விமானம் இன்று முற்பகல் ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து புறப்படது என வான்படை ஊடக பேச்சாளர் க்ரூப் கபிதான் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த விமானம் மூலம் மஸ்கெலியாவை அண்மித்த பகுதியில் இரசாயன பொருட்கள் தூவப்பட்டுகின்றன.

இதற்கிடையில், விக்டோரியா மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர்மின்னுற்பத்தி நிலையத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர் சீ.ஜீ.எஸ். குணசேகர 

அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தாய்லாந்து பொறியிலாளர்கள் குழுவொன்று செயற்கை மழை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.