தமிழீழ விடுதலை புலிகள் 28 சதவீதமான காடுகளை பாதுகாத்தனா், இன்று அதை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கிறாா்கள்..!
இலங்கையில் 28 சதவீதமான காடுகளே இப்போது எஞ்சியிருக்கின்றது. அவற்றில் பெ ரும்பாலானவை தமிழீழ விடுதலை புலிகளால் பாதுகாக்கப்பட்ட காடுகள் என கூறியி ருக்கும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா,
தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத மற்றய பிரதேசங்களில் அரசியல்வாதி வேடத்தில் இருக்கும் கடத்தல்காரா்களும், கடத்தல்காரா்களும் அழித்துவிட்டனா். இப்போதும் அழித்துக் கொண்டிருக்கின்றனா். எனவும் கூறியுள்ளாா்.
திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னரும் கூறியிருந்த நிலையில் இன்றும் அதனை மீளவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஜனா திபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
வனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் அரசைப் போன்றே அனைத்து குடிமக்களும் பொறுப்புடையவர்களாவர். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
எதிர்பார்க்கப்படும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன்
செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15 ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும்.