“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே” மீன் வியாபாரிகள் போராட்டம்!!

ஆசிரியர் - Admin
“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே” மீன் வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச சபையால் ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வயிட்டதன் பின்னர், சந்தைக்கு வெளியே இந்த போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே”,ஊழல் அரசியல் பெருச்சாளிகளே வரிச் சுமையை மக்கள் மீது திணிக்காதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு