அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிணையில் விடுவிப்பு.

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிணையில் விடுவிப்பு.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமணரத்ன தேரர் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் பண்டாரடுவ பொலிஸ் நிலையத்தில் உட்புகுந்து மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இன்று (23)பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் பண்டாரடுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட் அவர் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்னவால் தலா இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.
அம்பிட்டியே தேரரின் உறவு முறையான நபரின் இரண்டு பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பொலிஸார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.பின்னர் 2 பிள்ளைகளின் தந்தை அங்கு திடிரென மயக்கமடைந்ததால் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன் இரண்டு பிள்ளைகளையும் அவ்வீதியினால் வந்த ஒரு முச்சக்கர வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி இருந்தனர்.
மேலும் இரண்டு பிள்ளைகளும் சரியான நேரத்தில் வீடு திரும்பாததால் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இரண்டு குழந்தைகளையும் கேட்டு விசாரிப்பதற்காக பண்டாரதுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதுடன் அங்கு பிள்ளைகளை அடையாளம் தெரியாத முச்சக்கர வண்டி சாரதியிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரிகளை திட்டியுள்ளார்.
பின்னர் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஊடகங்களுக்கு பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளை அழைத்துச் செல்லச் சென்ற எனது உறவு முறையானவர் பண்டாரதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தவறு செய்ததால் கைது செய்யப்பட்டார். ஆனால் பொலிஸார் பிள்ளைகளை முறையாக உரிமையாளர்களிடம் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
பிள்ளைகள் அடையாளம் தெரியாத முச்சக்கர வண்டியில் பொலிஸாரினால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் தவறு. அங்கே 11 வயதில் ஒரு மகளும்இ ஆறு வயதில் ஒரு மகனும் இருந்தனர். முச்சக்கர வண்டி சாரதி வீட்டிற்குச் சென்று பிள்ளைகளின் தாயிடம் ஒப்படைத்ததாகக் கூறுகிறார்.ஆனால் தாய் வெளி நாட்டில் இருக்கிறார். பொலிஸ் அதிகாரிகள் சிறு பிள்ளைகளுடன் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் பற்றியும் எங்களுக்குத் தெரியும்.இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என்றார்.
இது தவிர பொலிஸாரால் அம்பிட்டியே தேரரின் உறவு முறையான நபர் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேரர் பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுவதுடன் குழப்பம் விளைவிக்கும் வகையில் தேரர் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது