சதுரங்க சம்மேளனத்தின் விருது ; ஒரேயொரு தமிழ் மாணவன் வாக்களிப்போம் - வெற்றி பெற செய்வோம்…

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் "Sri Lanka National Chess Excellency Awards 2025" எனும் விருதுகான பெயர் பட்டியலில் யாழின் இளம் சதுரங்க வீரன் வேணுகானன் நயனகேஷன் இடம்பிடித்துள்ள நிலையில், அவருக்கு வாக்களிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடாளாவிய ரீதியில், அதிக பிரபலமான பாடசாலை சதுரங்க வீரர், அதிக பிரபலமான இளையோர் சதுரங்க வீரர், அதிக பிரபலமான சதுரங்க வீரர், அதிக பிரபலமான சதுரங்க ஆளுமை ஆகிய விருதுகள் இருபாலருக்கும் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.
இம்முறை , அதிக பிரபலமான பாடசாலை சதுரங்க வீரர் மற்றும் அதிக பிரபலமான இளையோர் சதுரங்க வீரர் ஆகிய இரு விருதுகளுக்கான பட்டியலில் வேணுகானன் நயனகேஷனின் பெயர் இடம்பிடித்துள்ளது.
இவர் மூன்று முறை தொடர்ச்சியாக தனது வயதுப்பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றதுடன் எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜோர்ஜியாவில் நடைபெற்ற 08 வயதுப்பிரிவினருக்கான FIDE உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டதுடன், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் போட்டியில் நாட்டிற்கான பதக்கம் வென்று நாட்டிற்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்திருந்தார்.
எனவே இவரிற்கு உங்கள் வாக்குகளை வழங்க உங்கள் தொலைபேசியிலிருந்து CFSLSB01 இடைவெளி 04 எனவும் CFSLJB01 இடைவெளி 05 எனவும் Type செய்து 77010 எனும் இலக்கத்திற்கு தனித்தனியாக குறுந்தகவல் அனுப்பவும். இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதனூடாக தமிழ் மக்களுக்கும், சதுரங்கத்துறைக்கும் பெருமை சேர்ப்போம் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.