SuperTopAds

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர், புகையிரதம் மோதி உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர், புகையிரதம் மோதி உயிரிழப்பு

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் , புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சியை சேர்ந்த அனுசன்ராஜ் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதம் மோதியே உயிரிழந்துள்ளார். 

பாரதிபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது. 

அதேவேளை குறித்த புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை விளக்குகள் முறையாக இயங்குவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்