ஐ.நா சபையில் மைத்திரி அணிக்கும் மகிந்த அணிக்கும் இடையில் திடீர் சந்திப்புக்கள்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு சென்றுள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, மைத்திரியின் சார்பில் அங்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் சில ஆவணங்களை அவர் கையளித்ததாகவும் அறிய முடிகின்றது. எனினும் அவர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.