SuperTopAds

இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறது..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா?

ஆசிரியர் - Editor I
இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறது..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா?

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40 கூட்டத் தொடாில் இலங்கை தொடா்பா ன விடயங்கள் குறித்து இன்று அறிக்கை சமா்பிக்கப்படவுள்ளது. 

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை யில், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல், 

மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக் கிய உத்தியோகபூர்வ அறிக்கை, 

இன்றைய கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜெனீவா தூதரகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிக்கை, 

ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் 12.00 மணிக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணை யாளர் மிஷல் பெசல் சமர்ப்பிக்கவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவ்வறிக்கை தொடர்பில் சபையில் கருத்தாடல்கள் இடம்பெ றுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா கூட்டத் தொடரில் உரை நிகழ்த்தவுள்ளார். 

இதனையடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவ ற்றை ஊக்குவிப்பது தொடர்பில் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளி ன் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் 

கருத்துரைகளை வழங்குவர்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவ து கூட்டத்தொடரில் மேலும் 2 வருட கால அவகாசம் கோர வெளிநாட்டலுவல்கள் 

மைச்சு, பிரதமர் அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம் என்பன ஒன்றிணை ந்து அறிக்கையொன்றை ஏற்கெனவே, வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நாளைய தினம் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது