சிவனொளிபாத மலையில் பதற்றம், தமிழில் எழுதப்பட்ட பெயா் பலகைக்கு தாா் ஊற்றிய காடையா்கள்..

ஆசிரியர் - Editor I
சிவனொளிபாத மலையில் பதற்றம், தமிழில் எழுதப்பட்ட பெயா் பலகைக்கு தாா் ஊற்றிய காடையா்கள்..

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அண்மையில் தமிழில் பெயா் மாற்றப்பட்ட சிவனொ ளிபாத மலையின் பெயா் பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில பெயா் களுக்கு விசமிகள் தாா் ஊற்றியமையால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சிவனொளிபாதமலை என தமிழில் பெயரிடப்பட்டிருந்த குறித்த பெயர் பலகை அண் மையில் சிங்கள மொழியில் பெயர் மாற்றப்பட்டதனையடுத்து அங்கு ஏற்பட்ட பல பிர ச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் தமிழில் பெயர் மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு புதிதாக தமிழில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எ ழுதியிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை சில விசமிகள் தார் ஊற்றி அழித்து ள்ளனர். 

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனையடுத் து மஸ்கெலியா காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலை மையிலான குழுவினர், 

சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது டன் பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு