பெளத்த பிக்குவுக்கு முதுகு சொறியும் அரச அதிகாரிகள், காரணம் தெரியுமா..?

ஆசிரியர் - Editor I
பெளத்த பிக்குவுக்கு முதுகு சொறியும் அரச அதிகாரிகள், காரணம் தெரியுமா..?

வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம்- மூனாயமடு கி ராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ள காணியை விகாரை அமைப்பதற்கு வழங்குமாறு பெளத்த பிக்கு ஒருவர் கேட்டுள்ள நிலையில் மாவட்ட செயலகமும் ஒத்தூதுவதுபோல் செயற்படுகிறது.

புதுக்குளம் மூனாயமடு கிராமத்தில் இந்து ஆலயம் ஒன்று அமைந்துள்ள காணியை 1995ம் ஆண்டுக்கு பின்னர் இராணுவம் தம்வசப்படுத்தியது. பின்னர் அங்கு விகாரை ஒன்றையும் இராணுவம் அமைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த காணியை இராணுவம் தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ள நிலையில் அங்கு இராணுவத்தினர் இருந்த காலத்தில் அவர்கள் அமைத்த விகாரையை அடிப்படையாக கொண்டு அந்த காணியை தருமாறு பெளத்த பிக்கு ஒருவர் மாவட்ட செயலகத்திடம் கே ட்டுள்ளார். 

ஏற்கனவே அந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ள நிலையில் அந்த காணியை வழங்க முடியாது என கூறவேண்டிய வவுனியா மாவட்ட செயலகம் குறித்த விடயத்தை நல்லிணக்க கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து அந்த கூட்டத்தில் கலந்துரையாடலுக்காக சமர்ப்பித்துள்ளது. 

இது குறித்து பல்வேறு வி மர்சனங்கள் எழும் நிலையில் பொறுப்புவாய்ந்த அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வினை காணவேண்டும் என கேட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு