செருப்பால் அடித்த அமைச்சா் மனோகணேசன். ஜெனீவா செல்லும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு..
நானும் ஜெனீவாவுக்கு போனேன் என செய்தியில் இடம்தேடுவதை காட்டிலும் அதே நோக்கத்துடன் மக்களை சந்தித்து உள்நாட்டில் மக்களை திரட்டி போராட்டம் நடாத் துவதற்கு ஆழுமை வேண்டும் என அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா்.
ஜெனீவா கூட்டத்தொடா் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிலா் ஊடகங்களில் விளம்ப ரம் போட்டுவிட்டும், ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துவிட்டும் ஜெனீவாவுக்கு சென் றுள்ளனா். இன்னும் பலா் ஜெனீவாக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனா்.
அங்கு செல்பவா்களுடைய செயற்பாடுகள் குறித்து தொடா்ச்சியாக விமா்சனங்கள் இ ருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக தலைமுடி அயன் செய்வதற்கும், நல்ல ஹோட் டல்களில் தங்கி உறவினா்களை சந்திப்பதற்கும், சொகுசாக இருப்பதற்கும்
பல அரசியல்வாதிகள் விழுந்தடித்து ஜெனீவா செல்கிறாா்களே தவிர அவா்களால் வே று ஒன்றும் ஆவதில்லை. என விமா்சனங்கள் எழுகின்றது. இந்நிலையில் அமைச்சா் ம னோகணேசன் இன்று தனது முகப்புத்தகத்தில் எழுதியுள்ள குறிப்பில்,
“நானும் ஜெனிவா போனேன்னு செய்தியில் இடம் தேடறதைவிட, அதே நோக்கில் உள்நாட்டில் மக்களை திரட்டி போராட ஆளுமை வேண்டும்(சொந்த அனுபவம்)” என எழுதியுள்ளாா். இது ஜெனீவாவுக்கு விழுந்தடித்து ஓடும் அரசியல்வாதிகள்
பலருக்கு செருப்படி..