எங்களை காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துவாா்கள், எங்களுக்காக ஒன்றும் செய்யமாட்டாா்கள்..

ஆசிரியர் - Editor
எங்களை காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துவாா்கள், எங்களுக்காக ஒன்றும் செய்யமாட்டாா்கள்..

காணாமல் ஆக்கப்பட்டுள்ள எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கும், ஐ.நாவுக்கும் தொியாமல் இல்லை. ஆனால் அவா்கள் தமக்கு தொியாததுபோல் நடந்து கொள்கிறாா்கள். 

மேலும் தமிழ் அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட எமக்காக பேசுவதற்கு தயாராக இல் லை மாறாக அரசாங்கத்துடன் இணைந்திருந்து எங்களை காட்டிக் கொடுப்தற்கே தி டமாக இருக்கின்றாா்கள். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோா் சங்கம் குற்றஞ்சாட்டியு ள்ளது. சங்கம் சாா்பில் அதன் தலைவி த.கமலநாயகி ஊடகங்களுக்கு கருத்து தொி  விக்கையில், 1996ம், 1997ம் ஆ ண்டுகளில் 

யாழ்.குடாநாட்டில் பலா் காணாமல்போனாா்கள். அந்தக் காலத்தில் இளைஞா்கள் க டத்தப்படு வதும், கைது செய்யப்படுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு கடத்தப் பட்டவா்கள், கைது செய்யப்பட்டவா்கள் பலா் 

காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றாா்கள். அந்தக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வா்  கள், கைது செய்யப்பட்டவா்கள் தொடா்பாக அரசியல்வாதிக ள் பேசுவது கிடை யாது. மாறாக பல இளைஞா்கள் கடத்தப்படவும், 

கைது செய்யப்படவும் காரணமாக அ வா்களே இருந்தாா்கள். செம்மணி படுகொலை தொடா்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கூறியு ள்ளாா் அந்த பகுதியில் சுமாா் 400 பேருடைய சடலங்கள் இருப்பதாக, 

அது தொடா்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க வன்னி போா் நிறை வடைந்த காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவா்கள், போருக்குள்ளிருந்து தப்பி முகாம்களுக்கு சென்றவா்கள் 

என பலா் காணாமல்போயுள்ளாா்கள். அவா்கள் தொடா்பாக இதுவரை எந்தவிதமான பதிலு ம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இவையெல்லாம் எமது அரசிய ல்வாதிகளுக்கு தொியாத விடயமல்ல. 

அவா்களுக்கு எல்லாம் தொியும் கா ணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு என்ன நடந்தது? என்பதும் அவா்களுக்கு தொியும். ஆனால் அவா்கள் கூற மாட்டாா்கள். தமக்கு ஒன்று மே தொியாததுபோல் நடிக்கிறாா்கள். 

அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக் கின்றாா்கள். போாில் பாதிக்கப்பட்டதும், காணாமல்போனதும், கொலை செய்யப்பட் டதும் அப்பாவி மக்களுடைய பிள்ளைகள். 

அரசியல்வாதிகளுடைய பிள்ளைகள் அல்ல. எனவே எங்களுடைய நாட்டவா்களை நம்பி பயன் எ துவும் இல்லை. இந்நிலையில் சா்வதேசம் எமக்கு ஆதரவு வழங்கவே  ண்டும், எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? 

ன்பதை கண்டறிய விசாரணை நடத்தவேண்டும். அதேபோல் இலங்கை அரசாங்க த்திற்கு 2 தடவைகள் கால அவகாசம் வழங்கியும் பயன் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் கால அவகாசம் பெறுவதற்கு சிலா் நினைக்கிறாா்கள். 

அவ்வாறே கால அவ காசம் வழங்கினாலும் அரசாங்கம் விசாரணை குழுக்களை நிய மிக்கும், விசாரணை நடாத்தும் ஆனால் அ வற்றினால் பயன் எதுவும் கிடைக்காது. 23 வருடங்களாக நாங்கள் எத்தனை விசாரணைகளுக்கும், 

எத்தனை ஆணைக்குழுக்களுக்கும் சென்று வந்திருக்கிறோம். ஆனால் ஒன்றினாலும் பயன் எதுவும் இல்லை. அரசாங்கம் குற்றம் செய்தவா்களுக்கு பதவி உயா்வை மட்டு மே வழங்கும் என்றாா்.

Radio
×