18 மாணவா்களை புரட்டி எடுத்த பாடசாலை ஆசிாியருக்கு அடுத்து நடந்தது என்ன..?

ஆசிரியர் - Editor
18 மாணவா்களை புரட்டி எடுத்த பாடசாலை ஆசிாியருக்கு அடுத்து நடந்தது என்ன..?


மட்டக்களப்பு - பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்கள் 18 பேரை தாக்கி காயப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டுப் பாடங்களை முறையாக செய்துவரவில்லை என்று தெரிவித்து நேற்றையதினம் குறித்த மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சிலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் எம்.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

Radio
×