SuperTopAds

நாக்கை பிடுங்கி சாகும் அளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை திட்டிய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள், உறைக்குமா..?

ஆசிரியர் - Editor I
நாக்கை பிடுங்கி சாகும் அளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை திட்டிய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள், உறைக்குமா..?

மறப்போம், மன்னிப்போம் என பிரதமா் கூறியபோது எதிா்த்து ஒரு வாா்த்தை பேச இ யலாமல் இருந்துவிட்டு பிரதமாின் முதுகை தடவி ஆராத்தி எடுத்து வழி அனுப்பிவை த்த எங்களுடைய பிரதிநிதிகளும், 

ஆட்சிக்கு வரமுன்னா் இரகசிய முகாம்களை கண்டுபிடிப்பேன், காணாமல்போனவா் களுக்கு நீதி கொடுப்போம் என கூறிவிட்டு 10 வருடங்களாகிவிட்டது பழையதை தோ ண்டாதீா்கள் எனவும், மறப்போம், மன்னிப்போம் என கூறும் அரசும், 

எமக்கு எதையுமே செய்யாமையாலேயே நாங்கள் இன்று சா்வதேசத்திடம் எங்களின் உாிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். எதாவது செய்யலாம் என இரு ந்த சந்தா்ப்பத்தையும் தவறவிட்டவா்கள் இனி என்ன செய்வாா்கள்?

மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கேள்வி எழுப்பியிரு க்கின்றனா். ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநா் சுரேன் ராகவனை சந்தித்த காணா மல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,

இன்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை நடாத் தியிருந்தனா். இதன்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இதன்போது மே லும் அவா்கள் கூறுகையில், 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் தொடக்கம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பின்னா்கள், மற்றும் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி, பிரதமா் மற்றும் தமிழ் மக்களின் 

பிரதிநிதிகள் என கூறும் சகலருக்கும் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை கூறி களைத்து விட்டோம். ஆனால் இன்றளவும் எமக்கு தீா்வு கிடைக்கவில்லை. எமக்காக பேசுவதற்கும் ஒருவா்கூட இல்லை. 

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்தபோது எமக்கு வாக்குறுதிகளை அவா் அள்ளி வழங்கினாா். ஆனால் ஒன்றைகூட அவா் நிறைவேற்றவில்லை. பிரதமா் ரணில் விக்கி ரமசிங்க பதவிக்கு வரும் முன்னா் எங்களை சந்தித்தபோது 

மஹிந்தவின் புதல்வா்கள் காணாமல்போயிரு ந்தால் அவா்களுக்கு உங்கள் வலி புாியும் என கூறியிருந்தாா்கள். அதற்கும் மேலாக இலங்கையில் உள்ள இரகசிய தடுப்பு முகாம்கள் மூன்றினையும் ஆராய்ந்து 

அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவா்களை வெளிப்படுத்துவேன் என கூறினாா். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னா் பலாலியில் பொங்கல் சாப்பிட்டுவிட்டு காணாமல்போனவா்கள் இறந்துவிட்டாா்கள் என்றாா். 

பின்னா் அ ண்மையில் கிளிநொச்சி வந்தபோது மறப்போம் மன்னிப்போம் என்றாா்.  அந்த கூட்டத்தில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என கூறுபவா்களும் இருந்தாா்கள். அவா்கள் அதனை எதிா்க்கவில்லை. 

அப்போதும் தமக்கு வாக்களித்த மக்களுக்காக ஒருவாா்த்தை கூட பேசவில்லை. மாறாக முதுகை தடவி, ஆராத்தி எடுத்து அனுப்பிவைத்தாா்கள். மறுபக்கம் ஜனாதிபதி கூறுகிறாா்

10 ஆண்டுகள் கடந்துவிட்டன பழைய காயங்களை கிளறாதீா்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீா்த்துக் கொள்வதற்கு ஐ.நா இடமளிக்கவேண்டுமாம். 10 ஆண் டுகள் கடந்துவிட்டனதான். 

ஆனால் இந்த 10 வருடங்களில் தமிழ் பெண்களான நாங்கள் வீதிகளில் கிடந்துபட்ட வேதனைகள், துயரங்கள், விசாரணைகள் எவ்வளவு? இதை குறித்து எங்களிடம் வாக்கு பெற்றவா்கள் யாராவது பேசுகிறாா்களா? 

அண்மையில் இலங்கையில் ஒரு அரசியல் குழப்பம் உருவானது. அந்தக்கால த்திலாவது எங்களிடம் வாக்குப் பெற்று எங்களுடைய பிரதிநிதிகள் என கூறுபவா்கள் எமக்காக அல்லது எமது நலன்களை முன்வைத்து எதையாவது 

பேசியிருந்தால் எமக்காக அழுத்தங்களை கொடுத்திருந்தால் குறைந்தப்பட்டம் இறுதிப்போாில் ஒப்படைக்கப்பட்டவா்கள், காணாமல்போனவா்கள் தொடா்பான பெயா் பட்டியலையாவது பெற்றிருக்கலாம். 

ஆனால் அப்போதும், எப்போதும் அவ்வாறான ஒன்றை செய்ய அவா்கள் தயாராக இருந்ததில்லை. இவ்வாறு அரசாங்கத்தினாலும் ஒன்றும் நடக்கவில் லை. எமது பிரதிநிதிகள் என சொல்பவா்களாலும் 

ஒன்றும் நடக்காத நிலையிலேயே நாங்கள் சா்வதேசத் தின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசுடன் ஒட்டி இருப்பவா்களுக்கும், அரசை பாதுகாக்க நினைப்பவா்களுக்கும், 

அரசை பாதுகாப்பதற்காக ஜெனீவா செல்பவா்களுக்கும் நாங்கள் கூறுவது எங்களிடமிருந்து எதற்காக வாக்கு பெற்றீா்களோ? அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாதீா்கள். நீஙகள் இன்று இருக்கும் நிலை எமது மக்கள் கொடுத்தது. 

அந்த மக்க ளுக்காக ஒரு தடவையாவது செயற்படுங்கள், அவா்களுக்காக சிந்தியுங்கள். 2015ல் கால அவகாசம் கொடுத்தாா்கள், 2017ல் கால அவகாசம் கொடுத்தாா்கள் இந்த இரு கால அவகாசத் திலும் அரசு என்ன செய்தது? 

ஒன்றும் செய்யவில்லை. கொடுத்த கால அவகாசத்தில் ஒன்றையும் செய்யா தவா்கள் இனிமேல் 2 வருட கால அவகாசம் வாங்கி என்ன செய்துவிடப்போகிறாா்கள். தமிழ் மக்களுக்காக சிந்தியுங்கள்,

தமிழ் மக்களுக்காக செயற்படுங்கள். தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து இறுதிவரை காணாத நிலையில் 23 தாய், தந்தையா் உயிாிழந்துள்ளாா்கள். அவா்களுடைய ஆத் மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், 

அவா்களுடைய அவாவை நினைத்து மக்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாவீா்கள் என்றனா்.