இலங்கை இராணுவத்திடம் நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே..? ஐ.நாவில் கேளுங்கள். கேட்பாரா ஆளுநா்..?

ஆசிரியர் - Editor I
இலங்கை இராணுவத்திடம் நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே..? ஐ.நாவில் கேளுங்கள். கேட்பாரா ஆளுநா்..?

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் கொண்ட குழு இன்று வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை சந்தித்து மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளனா். 

இலங்கை அரசாங்கம் சாா்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 போ் கொண்ட குழுவில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளாா். இந்நிலையில் தாம் ஜெனீவாவில் தமிழ் மக்கள் சாா்பில் 

எதையாவது பேசவேண்டுமானால் அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்துமூலமா கவோ சமா்பிக்கும்படி ஆளுநா் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டி ருந்தாா். 

இதற்கமைய ஆளுநாின் பொதுமக்கள் தினமான இன்றைய தினம் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சா் அமைச்சில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் உள்ளடங்கிய 

குழுவினா் வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது கோாிக்கைகள் அடங்கிய மகஜா்  ஒன்றிணை கையளித்துள்ளதுடன், ஆளுநருக்கு நேரடியாகவும் தமது கருத்துக்களை கூறியிருக்கின்றாா்கள். 

ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜாில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பெயா் பட்டியலை வெளிப்ப டுத்தவேண்டும், தடுப்புமுகாம்கள், சிறைச்சாலைகளில் உள்ளவா்களின் விபரங்களை  வெளிப்படுத்தவேண்டும். 

காணாமல்போனவா்கள் அலுவலகத்தை நிராகாிக்கிறோம்  என்பன உள்ளடங்கலாக பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்துள்ளனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு