நடிகா் விவேக் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டாா்..

ஆசிரியர் - Admin
நடிகா் விவேக் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டாா்..

தென்னிந்திய திரைப்பட நடிகரும், பல்துறை ஆளுமை கொண்டவருமான நடிகா் வி வேக் இன்று மட்டக்களப்பு நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ் வுகளிலும் கலந்து கொண்டிருக்கின்றாா். 

மட்டக்களப்பு - காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணி வித்து வணக்கம் செலுத்திய அவர் பசுமை புரட்சிக்கு அமைவாக அங்கு மரக்கன்றை யும் நாட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்திரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது விவேக், மாநகரசபை முதல்வரினால் நடிகர் நினைவு சின்னம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த அவர் அங்கு சிறப்புரையாற்றியுள்ளார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் 

நேற்றைய தினம் விவேக் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு