SuperTopAds

தவிா்க்க முடியாத பாகமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு, 2019 வரவு செலவு திட்டமும் கூட்டமைபின் கைகளில்..

ஆசிரியர் - Editor I
தவிா்க்க முடியாத பாகமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு, 2019 வரவு செலவு திட்டமும் கூட்டமைபின் கைகளில்..

நிதி அமைச்சா் மங்கள சமரவீரவினால் கடந்த 5 ம் திகதி சமா்பிக்கப்பட்ட 2019ம் ஆண் டுக்கான பாதீட்டின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீா்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றது. 

மேற்கண்டவாறு அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர், 16 நாடாளும ன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இந்த வாக்கெடுப்பில் தாக்கம் செலுத்தவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல் பிரமுகர்கள், இந்த வரவு செலவுத் திட் டத்தை வெற்றியடையச் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர் கருத்தாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு வரவு 

செலவுத் திட்டத்தின் வெற்றிக்கு மிக அத்தியாவசியமாகின்றது.