மன்னாா் சதோஸ வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் 15ம் நுாற்றாண்டுக்குாியவையாம், அதிா்ச்சியில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் சதோஸ வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள் 15ம் நுாற்றாண்டுக்குாியவையாம், அதிா்ச்சியில் மக்கள்..

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா நிறுவனம் மேற்கொண்ட கார்பன் பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு எலும்புகள் தொடர்பிலான கார்பன் பரிசோதனை அறிக்கையின் 

மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்துள்ளது. மன்னார் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கை பகிரங்க ஆவணம் என்பதால், விரும்பியவர்கள் விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் 

என ஏற்கனவே நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு