SuperTopAds

பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

ஆசிரியர் - Admin
பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியப் போர் விமானம் இன்று (திங்கட்கிழமை) சுட்டு வீழ்த்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் எல்லைப் பகுதியில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. குறித்த எல்லைப் பகுதியில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியாவின் சுகோய்-30MKI ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தான் உளவு விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை விமானப் படையின் ராடர்கள் மூலம் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இந்திய போர் விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தன. இதன்பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் எல்லை மீறிய வான் தாக்குதல் இடம்பெற்றது.

இதனிடையே பாகிஸ்தானால் இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையாகி இந்தியாவுக்கு திரும்பியயுள்ள நிலையில் மீண்டும் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.