இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் விருதா? சமூக வலைத்தளங்களில் எழும் ஆதரவு..
இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக NobelPeacePrizeForImranKhan, PakistanLeadsWithPeace மற்றும் ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், மோதலை விரும்பவில்லை, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப் படுவார் என்று அறிவித்தார்.
இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.