இலங்கையில் அறிமுகமாகிறது செயற்கை மழை, அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் அறிமுகமாகிறது செயற்கை மழை, அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சு அறிவிப்பு..

இலங்கையில் செயற்கை மழையை பொழிவிக்கும் முன்னோடி வேலைத்திட்டத்தை அடுத்த மாத ம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மின்சக்தி அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

இதனை ஆராய்வதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை, மின்சார ச பை என்பனவற்றின் பிரதிநிதிகளும் இதில் அடங்குகிறார்கள். 

நீரேந்துப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி குறைவடையும் போது, இந்த முறைமையை பயன்படுத் த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை மழை என்பது.

மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செய ல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. 

வெளிப்புறத் துகள்களை தூவுவதற்கு வானூர்திகள், ரொக்கெட்டுகள் ஆகியன பயன்படுத்தப்படு கின்றன.

உலர் பனிக்கட்டி எனப்படும் திண்ம கார்பன்-டை-ஆக்ஸைடு, வெள்ளி அயோடைடு, சாதரண உப்பான சோடியம் குளோரைடு

திரவ புரப்பேன் போன்றவை வெளிப்புறத் துகள்களாக மேகங்களின் மீது தூவப்படுகின்றன. செ யற்கை மழையை பெய்விக்கும் முறையானது

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை மழையானது பெய்யா து இருக்கும்போது செயற்கை மழை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு