SuperTopAds

பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிாியா், விரக்தியால் தற்கொலைக்கு முயன்ற மாணவன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிாியா், விரக்தியால் தற்கொலைக்கு முயன்ற மாணவன் வைத்தியசாலையில்..

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மா ணவன் ஒருவன் ஆசிாியரால் தாக்கப்பட்ட நிலையில், அதிகளவான மாத்திரைகளை உட்கொண் டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்தச் சபம்பவம் தொடர்பாக மாணவனின், தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் 7 இல் கல்வி கற்று வரும் தண்ணீரூற்று மேற்கைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவன், 

மாணவர்கள் சிலரைத் தாக்கியதன் குற்றச்சாட்டில் ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டுள்ளார். கட ந்த 12.02.19 அன்று பாடசாலை சென்ற மாணவன், அதிகளவான பனடோல் மாத்திரைகளை உட் கொண்டு மயங்கிய நிலையில் 

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவனின் தாயார், இரண்டு ஆசிரியர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.