முல்லைத்தீவு- நந்திக்கடலில் களமிறங்கும் விசேட அதிரடிப்படை மற்றும் கரையோர காவல்படை, சட்டவிரோத தொழிலுக்கு தீா்வு வருமா..?
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் தொடா்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இ டம்பெற்றுவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து இன்று உயா்மட்ட கலந்துரை யாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபா் தலமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முல் லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் உள்ளிட்ட மீன்பிடி கடற்தொழில் சங்க தலைவர்கள் மற்றும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள்,
அதிரடிப்படையினர், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கூட்டத்தில் நந்திக்கடலில் தொடரும் சட்டவிரோத கடற்தொழிலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நந்திக்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர்களின் அனுமதிப்பத்திரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அதிரடிப்படையினரால் எந்த நேரத்திலும் பரிசோதனை
செய்ய அதிரடிப்படையினருக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகளினால் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையை அமுல்படுத்தும் வரை முல்லைத்தீவு மீன்பிடி சங்கங்களின் உதவியுடன், சட்டவிரோத கடற்தொழில் கட்டுப்படுத்த குறித்த சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோத கடற்தொழிலை கட்டுப்படுத்த கடற்தொழில் சங்கங்கள் அனைத்தும் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக மீன்பிடி சங்கங்களின் தலைவர்களினால் ஒருமித்த குரலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் (போஸ்காட்) வைத்து சட்டவிரோத கடற்தொழிலை கட்டுப்படுத்துவது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.