SuperTopAds

"பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை" – நிர்வாகம் அறிவிப்பு!

ஆசிரியர் - Admin

பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றது. 

இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகள் பெருகி வருவதால் அமெரிக்க குடிமக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைத் தொகுதிகள், வணிக வளாகங்கள், பாடசாலைகள் – கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். 

எனவே, அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.