SuperTopAds

நந்திக்கடல் பகுதியில் மீனவா்களும் கடற்றொழில் திணைக்கள அதிகாாிகளும் மோதல், 7 பேருக்கு காயம்..

ஆசிரியர் - Editor I
நந்திக்கடல் பகுதியில் மீனவா்களும் கடற்றொழில் திணைக்கள அதிகாாிகளும் மோதல், 7 பேருக்கு காயம்..

முல்லைத்தீவு- நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகிறாா்கள் என கூறப் பட்ட தகவலையடுத்து அவா்களை பிடிக்க சென்ற கடற்றொழில் திணைக்கள அதிகாாிகளுக்கும் மீனவா்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 7போ் காயமடைந்துள்ளனா். 

அத­னால் திணைக்­கள அணி­யில் சென்ற 7 பேர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ டுள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. முல்­லைத்­தீவு நந்­திக்­க­டல் பகு­தி­யில் சட்­ட­வி­ரோத கடற்­தொ­ ழில் நட­வ­டிக்கை மற்­றும் தடை­செய்­யப்­பட்ட வலை­க­ளைப் பயன்­ப­டுத்­தித் 

தொழில் செய்­வோ­ ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­தொ­ ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­க­ளத்­துக்கு கடற்­தொ­ழி­லா­ளர்­கள் முறைப்­பாடு செய்­துள்­ளார்­கள். அவ ர்­க ளைப் பிடிக்க கடற்­றொ­ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­க­ளம் சார்­பில் 

மேற்­கு­றித்த குழு­வி­னர் சென்­றுள்­ள­னர். நந்­தி­க்க­ட­லில் மேற்கு பகு­தி­யான வற்­றாப்­பளை தொடக்­ கம் கேப்­பா­பி­ல­வுக்கு இடைப்­பட்ட செம்­மன் மோட்­டைப்­ப­கு­தி­யில் கடற்­க­ரை­யி­லி­ருந்து மீன­வர்­க­ ளின் வீடு வரை அதி­கா­ரி­கள் குழு­வி­னர் சென்­றி­ருந்­த­னர் என்­றும் 

அதன்­போதே தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ னர் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு நிலமை கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. தாக்­கு­தல் குறித்து கடற்­றொ­ழில் நீரி­யல் வளத்­து­றைத் திணைக்­க­ளத்­தி­னர் 

முள்­ளி­ய­வ­ளைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். எனி­னும் விவ­ரங்க­ளைப் பொலி­ஸார் தெரி­விக்­க­வில்லை. மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் ­து­றைத் திணைக்­கள உத­ விப் பணி­பா­ள­ரின் கருத்­தை­யும் பெற­மு­டி­ய­வில்லை.