SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க ரவிகரன் வழங்கிய உதவி..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க ரவிகரன் வழங்கிய உதவி..

கரைதுறைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் முல்லைத்தீவுமாவட்ட கூடைப்பந்தா ட்ட சம்மேளனம் என்பவற்றிற்கு, முன்னாள் வடமகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டு 2018இல் இருந்தே ரவிகரன்  இவ்வுதவிகளை வழங்கியுள்ளார். கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுச் செயலக த்தில் இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கரைதுறைப்பற்றுப் பிரதேச இளைஞர் சம்மேளனத்தினருக்கு 40,000.00 (நற்பதாயிரம்) ரூபாய் பெறுமதியில், கால்பந்து, மற்றும் சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 40,000.00 (நாற்பதாயிரம்) ரூபாய் பெறுமதியில் கூடைப்பந்தாட்டத்திற்குரிய சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. 

அத்துடன் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் மு.சொகைல், செயலாளர் ச.சதீஸ் ஆகியோருடன், முல்லைத்தீவு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன 

உபசெயலாளர் வை.கீர்த்திகன் ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் வடமாகாணசபை உறுப் பினர் து.ரவிகரன் அவர்களிடமிருந்து இவ்வுதவிப் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். 

மேலும் இந் நிகழ்வில் ந.முகுந்தன் (மாவட்ட விளையாட்டு அதிகாரி, முல்லைத்தீவு) மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் கலநதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.