நான் அதுக்கு சாிப்பட்டு வருவேன்.. மக்கள் தான் நம்பவில்லை என்கிறாா் டக்ளஸ்.

ஆசிரியர் - Editor I
நான் அதுக்கு சாிப்பட்டு வருவேன்.. மக்கள் தான் நம்பவில்லை என்கிறாா் டக்ளஸ்.

தமிழ் மக்களின் அரசியல் எதிா்பாா்ப்பு மற்றும் அபிவிருத்திசாா் எதிா்பாா்ப்புக்களை நிவா்த்தி செய்வதற்கான வழிமுறை தன்னிடம் உள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், முன் கொண்டு செல்வதற்குமான ஆணையை தமிழ் மக்கள் தனக்கு வழங்கவில்லை. என நாடாளு மன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

சண்டிலிப்பாய் மத்தி இளங்கதிர் சனசமூக நிலைய வருடாந்த ஆண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்துரைத்த அவர் நாம் இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தொடர்ந்தும் எமது அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்லமுடியாது. 

தீர்வுகாணப்படாது தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை எமது காலத்திலேயே நாம் காணவேண்டும். தென்னிலங்கை அரசுடனும் மக்களுடனும் எமக்குள்ள நல்லுறவின் காரணமாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழி முறையை முன்னெடுத்து அதை வெற்றிகொள்வதற்கான பொறிமுறை எம்மிடம் உள்ளது.

கடந்த காலங்களில் பல அழுத்தங்களையும் உயிர் அச்சுறுத்தல்களும் எமக்கு இருந்த போதிலும் அவற்றை எல்லாம் கண்டு நாம் அச்சமடையாது, ஒதுங்கி ஓடி ஒழியாது எமது மக்களின் பாதுகாவலர்களாக மக்களுடன் இருந்து அவர்களுக்கான தேவைப்பாடுகள் அனைத்தையும் பெற்றுக்கொடுத்து இன்று எமது மக்கள் சிறந்ததொரு 

நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்து கொடுத்தோம் அந்தவகையில் காலம் தொடர்ந்தும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. நிச்சயமாக இனிவரும் காலத்தில் எமது கைகளுக்கு அரசியல் அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு  அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்குமானால் 

வெகு விரைவில் எமது மக்கள் கண்டுவரும் இன்னல்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்லாது தமிழ் மக்களில் அரசியல் உரிமைகளையும் எம்மால் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் எம்மிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு