SuperTopAds

கள்ளப்பாடு அ.த.க பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி..

ஆசிரியர் - Editor I
கள்ளப்பாடு அ.த.க பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி..

முல்லைத்தீவு - கள்ளப்பாடு அ.த.க பாடசாலையில் 2019ஆம் ஆண்டிற்கான இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

பாடசாலையின் முதலவர் ந.கருணாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, கடந்த 08.02.2019 அன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில் மங்கலவிளக்கேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவர்களது அணிநடை, 

என்பவற்றையடுத்து இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் இடம்பெற்றன. தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், இல்லமெயவல்லுநர் திறனாய்வுப் போட்டிகளில்

 பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், 

திருமதி.த.வஜிதரன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் திட்டமிடல், முல்லைத்தீவு), க.கணேசலிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்), திருமதி.ஜெ.சூரியகாந்தி(ஆசிரிய ஆலோசகர் தமிழ்), 

அயற்பாடசாலை அதிபர்கள், கள்ளப்பாடு வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், கிராமத்தின் பொது அமைப்புகளின் சார்பாளர்கள் என 

பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.