SuperTopAds

கேப்பாபிலவில் மக்களுடைய காணிகளே இல்லையாம் பொய் கூறும் இராணுவம், உண்மையை அறிய நாளை கூட்டம்..

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவில் மக்களுடைய காணிகளே இல்லையாம் பொய் கூறும் இராணுவம், உண்மையை அறிய நாளை கூட்டம்..

முல்லைத்தீவு- கேப்பாபிலவில் 104 குடும்பங்களுக்கு சொந்தமான 171 ஏக்கா் காணி தொடா்ந்தும் இராணுவத்தினாின் கட்டுப்பாட்டுக்குள் இருக் கும் நிலையில் மக்களுடைய காணிகளே இல்லை. என இராணுவத்தினா் கூறியுள்ளனா். இந்நிலையில் இந்த விடயம் தொடா்பாக ஆராய நாளை 11ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. 

இது குறித்து கேப்பாபிலவு மக்கள் கருத்து தொிவிக்கையில், கடந்த 31ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கேப்பாபிலவு மக்களும், வடமாகாண ஆ ளுநா் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராணுவ அதிகாாிகள் இணைந்து சந்திப்பு ஒன்றிணை நடாத் தியிருந்தனா். இந்த சந்திப்பின்போது இப்போது இராணுவத்தின்வசம் உள்ள காணிகளில், 

மக்களுக்கு சொந்தமான காணிகள் எவையும் இல்லை என இராணுவத்தினால் தொிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்ட செயலருடன் தொடா்பு கொண்டு கேட்டபோது அது தொடா்பா ன தகவல்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திடமே உள்ளது. என கூறப்பட்டது. 

இதற்கமைய கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி பிாிவுடன் தொடா்பு கொண்டபோது தங்களிடம் உள்ள தரவுகளின் படி சுமாா் 56 குடும்ப ங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கா் காணி தொடா்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் எமது தரவுகளின் படி 104 குடும்பங்களுக்கு சொந்தமான 171 ஏக்கா் காணி இராணுவத்தின் வசம் உள்ளது. ஆகவே

இது தொடா்பாக ஆராய்ந்து உண்மை நிலையை அறிவதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நாளை 11ம் திகதி வடமாகாண ஆளுநா் மற் றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராணுவ அதிகாாிகள், கேப்பாபிலவு மக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன் று இடம்பெறவுள்ளது. இதன்போது எமது காணிகளிலேயே இராணுவம் தொடா்ந்தும் இருக்கிறது

என்பதை உறுதிப்படுத்த முடியும். அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி பகுதியிடம் இருக் கின்றது. ஆகவே எமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். என நாங்கள் தொடா்ச்சியாக கேட்போதும். அதனோடு கேப் பாபிலவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் 4 பேருக்கு தலா 25 ஏக்கா் வீதம் காணி இருக்கின்றது. 

அதேபோல் சுவா்ணபூமி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளும் இருக்கிறது. அவற்றையும் எமது தரவுகளில் உள்ளடக்கியிருக்கின்றோம். அது தொடா்பிலும் நாங்கள் தொடா்ந்து கோாிக்கை விடுப்போம் என்றனா்.