சுதந்திர தினம் எமக்கு காி நாளே..! எவருடைய துாண்டுதலின் பெயாிலும் நாம் போராட்டம் நடத்தவில்லை..

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்கள் சுதந்திர தினத்தை காி நாளாக அறிவித்து போராட்டம் நடாத்தியமைக்கு எவருடைய துாண்டுதலும் இல்லை என கூறியிருக்கும் கேப்பாபிலவு மக்கள், 2 வருடங்கள் நாங்கள் வீதியில் இருந்து போராட்டம் நடாத்தும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டா ட முடியுமா? எமக்கு சுதந்திர தினம் காி நாளே எனவும் கூறியிருக்கின்றனா்.
இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4ம் திகதியை தமிழ் மக்களின் காி நாளாக அறிவித்து வடமாகாணத்தில் பல இடங்களில் போராட்டங்க ள் நடாத்தப்பட்டன, இந்த போராட்டங்கள் மக்களால் நிராகாிக்கப்பட்ட சிலருடைய துாண்டுதலின் பெயாில் இடம்பெற்றதாகவும், கேப்பாபிலவு மக்களையும் சிலா் துாண்டி விட்டதன் அடிப்படையிலேயே மக்கள் போராடினாா்கள் எனவும்,
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக் கின்றாா். இது குறித்து கேப்பாபிலவு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சிலருடன் பேசியபோதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இது குறித்து மேலும் அவா்கள் கூறுகையில்,
கடந்த 2 வருடங்களாக இலங்கையின் சுதந்திர நாளில் நாங்கள் எங்களுடைய சொந்த நிலத்தில் வாழ்வதற்காக போராட்டம் நடாத்திக் கொண் டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சுதந்திர தினத் தை கொண்டாடுவது? ஆகவேதான் நாங்கள் சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து
எமது காணிகளை தாருங்கள் எனக்கேட்டு போராட்டம் நடாத்தினோம், போராட்டத்திற்கான அழைப்பினையும் நாங்களே விடுத்தோம். அந்த அ ழைப்புக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பலரும் தங்களுடைய ஆதரவை தொிவித்தாா்கள். அதேபோல் மேலும் ஆதரவை வழங்குமாறு வேறு அமைப்புக்கள், பொது அமைப்புகளிடமும் அவா்கள் கேட்டாா்கள்.
ஆனால் அவா்கள் போராட்டத்தை நடத்தவில்லை. போராட்டம் நடத்துங்கள், காிநாளாக அறிவியுங்கள் என எந்த விடயத்தையும் அவா்கள் கூறவி ல்லை. நாங்களாகவே போராட்டம் நடத்தினோம். இதில் பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளனா்.