SuperTopAds

அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்பை பார்த்து கேலியாக கைதட்டிய பெண்!

ஆசிரியர் - Admin
அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்பை பார்த்து கேலியாக கைதட்டிய பெண்!

அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசினார். அப்போது அமெரிக்காவில் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் யாரிடமும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்க கூடாது. வெறுப்பு அரசியல் தவறானது என்று கூறினார். 

இதைக் கேட்டதும் பெண் சபாநாயகர் நான்சி பெலோச்சி ஆச்சரியம் அடைந்தார். இவர் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர் டிரம்பின் பேச்சை கேட்டு கையை டிரம்பின் முகத்திற்கு பக்கத்தில் வைத்து கை தட்டினார். 

டிரம்பை கிண்டல் செய்யும் விதமாக அவர் கை தட்டியது சமூக வலை தளங்களில் வைரலாகியது. டிரம்பை கோபத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் கைதட்டினார் என கூறப்படுகிறது. இந்த வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசிய நாடுகளில் ஒரு அதிபருக்கோ, பிரதமருக்கோ எதிராக பேசினால் கடுமை யான நடவடிக்கை எடுக் கப்படும். ஆனால் அமெரிக்காவில் அப்படி கிடையாது. அதிபர் டிரம்பை தரக்குறைவாக கார்ட்டூன் போல வரைந்து செய்திகள் வெளியிட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுப்ப தில்லை.

அவர் டூவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை பிரிண்ட் செய்த செருப்பு கூட சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் உலக மக்களை கவர்ந்துள்ளது. இதே கூட்டத்தில் டிரம்ப் உரையை கேட்க வந்து பள்ளி சிறுவன் ஜோஷ்வா டிரம்ப் (11) தூங்கிய போட்டோக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.