முல்லைத்தீவில் சமூக செயற்பாட்டாளா் மீது தாக்குதல், 6 போ் கொண்ட குழு தாக்குதல் நடாத்தியதாம்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்ப்பாட்டாளர்களில் ஒருவரான முல்லை ஈசன் என்று அழைக்கப்படும் புதுக்குடியிருப்பு “அ” பகுதி தேவிபுரம் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந் தையான 39 வயதுடைய தம்பையா யோகேஸ்வரன் என்பவர் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
03.02.2019 அன்று இரவு 10 மணியளவில் அவருடைய வள்ளிபுனம் கடைக்குள் புகுந்த 3 நபர்கள் தலையில் பலமாக பொல்லுகள் கொண்டு தாக்கியுள்ளனர் அதேவேளை கடைக்கு வெளியே நின்ற ஒருவர் தாக்குவதை வீடியோ பதிவு செய்ததுடன் மொத்தமாக 6 பேர் தாக்குதல் சம்பவ த்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பலமாக தலையில் காயமடைந்ததோடு.
கை ஒன்றும் முறிவடைந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச் சை பெற்றுவருவதோடு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.