SuperTopAds

"24 மணிநேரம் மத்திய LRT நிலையம் திறக்கப்படும்" – மாகாண சபை தகவல்!

ஆசிரியர் - Admin

கடும் குளிரான காலநிலையில் இருந்து வீடற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், எட்மன்டன் மத்திய LRT நிலையம் புதிய சேவையை வழங்கியுள்ளது. 

அந்தவகையில் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தொடர்ந்தும் 24 மணிநேரம், மத்திய LRT நிலையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எட்மன்டன் மாகாண சபை அறிவித்துள்ளது. 

வீடற்றவர்கள் தங்குவதற்கான கூடுதல் அவசர முகாம்களில் திறக்கப்படாது என்று ஹோவர்ட் டிரஸ்ட் திங்கட்கிழமை அறிவித்தது. இதற்கான மாற்று திட்டத்தை எட்மன்டன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.

அதன் அடிப்படையில் LRT நிலையத்தினை வீடற்றவர்களுக்காக எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் இரவு வேளைகளில் திறந்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அங்கு -20ற்கும் குறைவான காலநிலை நிலவும் பட்சத்தில் 24 மணிநேரம், மாற்று திட்டம் வரும்வரை திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.