சம்பந்தனோ,சுமந்திரனோ அழுத்தம் கொடுத்திருந்தால் சீக்கிரம் காணி கிடைத்திருக்கும்!

300 நாட்கள் கடந்து விட்ட நிலையிலே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ அவா்கள் குரலினை அழுத்தி கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் எங்கள் பூமி கிடைத்திருக்கும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாபுலவில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நேற்று (01) குடியேறிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டனா்.
கருத்து தெரிவித்த அரியகலா சிவப்பிரகாசம்.......
கேப்பாபுலவு மக்களாகிய நாங்கள் 307 ஆவது நாளில்தான் எங்கள் நிலத்தில் சுதந்திரமாக காலடி எடுத்துவைத்துள்ளோம். இருந்தும் இன்னும் எங்கள் மக்களின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.
எங்கள் வாழ்விடத்திற்கு பொருத்தமான கட்டிடங்கள் தான் இங்கு காணப்படுகின்றது. எங்கள் கிணறுகள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.
தண்ணீர் கூட குடிக்கமுடியாத நிலையில் நாங்கள் எங்கள் காணிகளுக்குள் நிக்கின்றோம்.மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் இன்று நாங்கள் 300 நாட்கள் கடந்து விட்ட நிலையிலே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோா் குரலினை அழுத்தி கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் எங்கள் பூமி கிடைத்திருக்கும்.
பத்து மாதங்கள் இழுபட்டிருக்கா. இவ்வாறு பத்து மாதங்கள் இழுபட்டிருந்தும் எங்களுடைய மக்களின் ஒருபகுதி காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இருந்தும் இன்றும் விடுவிக்கப்படாத காணிகளுக்குள் மக்களுக்கு தேவையான பொது பாடசாலை முன்பள்ளி,பொதுநோக்கு மண்டபம்,விளையாட்டு மைதானங்கள் ஆலயங்கள் அனைத்தும் அடங்கு கின்றன.
அவையும் விடுவிக்கப்படவேண்டும். எங்கள் பிரதிநிதிகள் இதனை கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசிற்குற்கும் சர்வதேசத்திற்கும் தெரிவித்து எங்கள் காணிகளை விடுவிக்க ஆவண செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.