SuperTopAds

இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களுக்கு காிநாள், பாாிய எதிா்ப்பு போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களுக்கு காிநாள், பாாிய எதிா்ப்பு போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்..

எதிர்வரும் 04ஆம் திகதி இலங்கையினுடைய 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி 704 நாட்களாக போராடும் கேப்பாப்பிலவு மக்கள் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதோடு குறித்த சுதந்திர நாளை துக்கநாளாகவும், கறுப்புப் பட்டி நாளாகவும் தாம் அனுஷ்டி க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.எனவே இந்த போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்து ழைப்புத்தர முன்வரவேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர். குறித்த போராட்டம் தொ டர்பில் தெளிவுபடுத்த, 

 இன்றைய நாள் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை அவர்கள் ஏற்பாடுசெய்திருந்த நிலையல், அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  கேப்பாப்புலவு பூர்வீக மக்களாகிய நாம் 704 நாட்களாக எங்களுடைய பூர்வீக வழ்விடம் கோரி 

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எமது காணி விடுவிப்புத் தொடர்பில் இதுவரையும் அரசினால் எவ்வித தீர்க்கமான முடிவுகள் வரவில்லை. இருந்தும் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கை அரசு சுதந்திர தினத்தினைக் கொண்டாடவுள்ளது. எங்களுடைய தொடர் போராட்டத்தில் இரண்டாவது கட்டமாக நாங்கள் சுதந்திர தினத்தினை 

எதிர்த்துப் போராடினோம். இதுவரையும் சுதந்திர தினத்தை எமக்கு துக்கநாளாகத்தான் இந்த அரசு பிரகடனப்படுத்தியிருக்கின்றது. எதிர்வரும் 4ஆம் திகதி இந்தச் சுதந்திர தினத்தினை, வாழக் கதியற்று, வாழ்விடமற்று, தொழில் சுதந்திரம் இழந்து, பிள்ளைகளின் கல்வியை இழந்து, இந்த தெருவோரத்தில் இருக்கும் நாங்கள் அரசாங்கம் கொண்டாடும் 

இந்த சுதந்திர தின விழாவினை, துக்க நாளாக எங்களுடைய கறுப்புப்பட்டி நாளாக நாங்கள் அனுஷ்டிக்கவிருக்கின்றோம். இந்த சுதந்திர தினம் அவசியம்தானா, சுதந்திரமெனில் வாழும் சுதந்திரம் இருக்கவேண்டும், பேச்சுச் சுதந்திரம் இருக்கவேண்டும், கல்விகற்கும் சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் சகலதும் பறிக்கப்பட்டு 

இந்த நிலத்திற்குரிய பூர்வீக மக்களாகிய நாம், இன்று அரசினாலே ஆக்கிமிக்கப்பட்ட எங்களுடைய பிரதேசத்தில் அவர்கள் உல்லாசமாக வாழ, அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு இதிலே கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றோம். வெயில், மழை, பனியென சிறார்களோடும், வயோதிபர்களோடும் 

பல துன்பங்களுக்கு மத்தியில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துக்கொண்டிருக்கின் றோம். இவ்விடத்தில் எமது கண் முன்னேயே பல விடயங்களைக் காணக்கூடியவாறு உள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள எங்களுடைய காணிக்குள்ளே, இரவு 08.00மணிக்குப் பின்பு இங்கு சொகுசு வாகனங்களில், சிங்கள பெண்கள், 

சிறார்கள் வருவதும், அதிகாலையில் செல்வதையும் காணக்கூடியவாறு உள்ளது. இவ்வாறு அவர்கள் எங்களுடைய மண்ணிலே சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் நாம் அகதிவாழ்க்கை வாழ்ந்து, இன்று முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் ஆகியும் எங்களுடைய கேப்பாப்புலவு மக்கள் இன்றும் 

தெருவில் நின்று போராடிக்கொண்டு சொந்தஇடத்தை அடையாமலே இருக்கின்றோம். இராணுவத்தினர் எமது காணிகளுக்குள்ளே நேற்றைய தினத்திலிருந்தே சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு, பல வர்ணங்களிலான மின்குமிழ்களை வாயிலுக்கு முன் அலங்கரித்து சுதந்திர தினத்திற்கு தயாராகின்றனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தினைக் கொண்டாடவுள்ள அரசு, நிர்க்கதியாகியுள்ள எங்களுடைய காணிப் பிரச்சினையை தீர்க்காது சுதந்திர தினம் கொண்டாட இருக்கின் றது. இந்த சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகின்ற அரசு, இந்த மக்களுடைய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

எனவே நாங்கள் இந்த சுதந்திர நாளை நாங்கள் கொண்டாடத் தயாரக இல்லை. சுதந்திர தினத்தை நாம் எதிர்த்து போராடவிருக்கின்றோம். இந்த போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள் கட்சிபேதங்களின்றியும், மதபேதங்கள் இன்றியும், அனைத்து மக்களும், வெளியிடங்களிலுமிருந்து வருகைதந்து அணி திரண்டு 

எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றனர்.