வடமராட்சி கிழக்கில் தொடரும் கொள்ளை, பொலிஸாா் உடந்தை, கண்ணை மூடிக் கொண்டிருக்கும் பிரதேச செயலா்..
யாழ். வடமராட்சி கிழக்கு நிச்சியவெட்டை புல்லாவெளி பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு அண்மை காலமாக அதிகரித்துள்ளது.
இரவு வேளைகளில் ரிப்பர் மூலம் அனுராதபுரம் மற்றும் வவுனியா பகுதிகளில் அனுமதி பத்திரம் பெற்று யாழ்ப்பாணம் பகுதிக்கு ஆற்று மண் விநியோகிக்கும் நபர்கள் பெறப்பட்ட
அனுமதி பத்திரத்தில் இரண்டாவது மூன்றவது தடவையாக மணல் மண் விநியோகிப்பதற்க்காக குறித்த நிச்சியவெட்டை புல்லாவெளி பகுதிகளில் உழவு இயந்திரத்தில் ரிப்பருக்கு ஏர்றுவதற்க்கு ஏற்றவகையில் மணல் மண் குவித்து வைக்கப்பட்டு அவை ஏற்றப்படு கின்றன.
இதனால் அப்பகுதியில் பாரிய அளவில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விநியோ கம் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறன சட்ட விரோத மணல் அகழ்வு மற்றும் விநியோகத்திற்க்கு பொலிஸாா் உதவுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் அட்ட விரோத பனைமரங்கள் தறிப்பு மற்றும் கடத்தல் என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் சுமார் நான்கிற்க்கு மேற்பட்ட ரிப்பர் வாகனங்கள் இவ்வாறு சட்டவிரோத மணல் ஏற்றி விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும்
இது தொடர்பாக பிரதேச செயலருக்கும் அறிவித்ததாகவும் அவரும் ஒதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.