யாழ்ப்பாணம்- சா்வதேச வா்த்தக கண்காட்சியில் ஊழல்.. உடனடி விசாரணைக்கு உத்தரவு.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சா்வதேச வா்த்தக கண்காட்சியில் ஊழல்.. உடனடி விசாரணைக்கு உத்தரவு.

யாழ்ப்பாணம்- சா்வதேச வா்த்தக கண்காட்சியில் 167 கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு 269 கூடாரங்கள் அமைக்கப்பட்டு வா்த்தக கண்காட்சி நடாத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இன்நிலையில் உாிய விசாரணைகளை நடாத்துமாறு யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனோல்ட் உ த்தரவு பிறப்பித்திருக்கின்றாா். இது குறித்து மேலும் தொியவருவதாவது,  யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் 25, 26, 27 ஆகிய 3 தினங்களும் 

இடம்பெற்ற வர்த்தக கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தினால், சபைக்கு வர வேண்டிய வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்ககுக் காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் 

ஆராயும் வகையில் ஓர் விசாரணையை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். அதேவேளை குறித்த கண்காட்சியின் போது பார்வையாளர் பற்றுச் சீட்டுக்கள் 100 புத்தகங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 

மேலும் 25 புத்தகங்கள் எந்தவிதமான அனுமதியும் இன்றி அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் சபை உத்தியோகத்தர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் இணைந்த விசாரணையை மேற்கோள்ளுமாறு 

அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு