குடாநாட்டுக்கான குடிநீா் விநியோக தடைக்கு பின்னால் இருக்கும் கோா்ப்பிறேட் மாபியாக்கள்..

ஆசிரியர் - Editor I
குடாநாட்டுக்கான குடிநீா் விநியோக தடைக்கு பின்னால் இருக்கும் கோா்ப்பிறேட் மாபியாக்கள்..

வடக்கு மாகாணத்தில் மாதாந்தம் 10 கோடி ரூபாவுக்கு போத்தலில் அடைத்த நீரைப் பயன்படு த்துவதாக தெரிவித்த பொருளியல் ஆய்வாளர் ரி.வி.நிரஞ்சன் வருடாந்தம் வீண்விரயமாகும் மழை நீரை யாழ்.மக்களுக்கு குடிநீராக வழங்குவதை தடுப்பதில் என்ன நியாயமிருக்கிறது என் று கேள்வி எழுப்பியுள்ளார். 

இரணைமடுத்திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் மாதாந்தம் 10 கோடி ரூபாவினை போத்தலில் அடைத்த நீருக்காக செலவிடப்படுகின்றது. குறித்த நீர் தென்பகுதியில் 85 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் பிரதேசங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடக்கில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீர் 5 சதவீதமே சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இதனால் இவற்றை போத்தலில் அடைக்கமுடியாது.வடக்கில் குழாய் மூலம் நீர் விநியோகத்துக்கு உட்படுத்தப்படும் குடிநீரை குறைந்தபட்சம் 5 இலிருந்து 50 சதவீதத்துக்கு கொண்டுவரவேண்டியது அரசின் கடமை. 

ஆனால் உலக சுகாதார நிறுவனம் 100 வீதம் சுத்திகரிக்கப்பட்ட நீரை வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. இதன் அடிப்படையிலேயே குடாநாட்டு மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்கும்நோக்கத்துக்காக யாழ்ப்பாணம்-இரணைமடு குடிநீர் திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி பல ஆயிரம் கோடி ரூபாவை 

டனாக வழங்கியது. இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நீர்நிலைகளின் 65 வீதம் விவசாயத்துக்கும் 35 வீதம் பிறதேவைகளுக்கும் என்று வரையறுத்துள்ள நிலையில் இரணைமடு குறித்த நீரை யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு வழங்கவிடாது அரசியல் இலாபம் தேட முனையும் சந்தர்ப்பவாத அரசியலை எவர் மேற்கொண்டாலும் 

அது அநாகரிக அரசியலே. அரசியலுக்கு அப்பால் நியாயமான முறையில் இரணைமடு குடிநீர் திட்டத்தை நல்ல நோக்கத்தோடு அணுகுவதே யாழ்.குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கான ஒரே வாய்ப்பாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு