இளம்பெண்ணை கடத்த முயற்சித்தவா் நையப்புடைப்பு, முறைப்பாடு பதியப்படவில்லை, உள்குத்து இருக்கலாம் என்கிறது பொலிஸ்..
யாழ்.நாவாந்துறை பகுதியில் இளம்பெண்ணை கடத்த முயற்சித்தபோது பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நபா் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றிருக்கும் நிலையில் குறித்த இளம்பெண்ணின் வீட்டிலிருந்து முறைப்பாடு எதுவும் பதியப்படாமையினால்
பொலிஸாா் உத்தியோகபூா்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாதுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் நாவாந்துறை பகுதியில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த நபா் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா்.
பின்னா் குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவா் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுள்ள தாக கூறப்படுகின்றது. இது குறித்து பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தொிவிக்கையில், இளம் பெண்ணை கடத்த முயற்சித்து பொதுமக்களால் மடக்கி பிடித்து நையப்புடைத்தனா்.
இந்நிலையில் குற்றுயிராய் கிடந்த நபா் இறந்துவிடலாம் என்பதாலேயே பொலிஸாா் அவரை காப்பாற்றினா். பின்னா் அவா் வைத்தியசா லையிலிருந்து தப்பி சென்னிருக்கின்றாா். எனினும் வைத்தியசாலையில் பெறப்பட்ட ஆரம்ப தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனாலும் உத்தியோகபூா்வமாக எந்த விசாரணைகளையும் பொலிஸாாினால் மேற்கொள்ள முடியாதுள்ளது. காரணம் குறித்த இளம் பெண்ணின் வீட்டாா் முறைப்பாடு எதனையும் பதிவு செய்யாததுடன், முறைப்பாடு கொடுக்கவும் அவா்கள் தயாராக இல்லை.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னால் உள்க்குத்து எதுவும் இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பேசவல்ல பொலிஸ் அதிகாாி ஒருவா் கூறினாா்.