புதுவருட தினத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கும் பரிசு

இதுவரை காலமும் இராணுவத்தினரின் வசமிருந்த கேப்பாப்புலவு கொட்டு கிணற்று பிள்ளையார் ஆலயம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
கேப்பாப்புலவு கொட்டு கிணற்று பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரால் இன்றைய தினம் சிறப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கோயில் புதுவருட தினமான இன்றைய தினம் தொடக்கம் பொதுமக்கள் வழிபடுவதற்கு இராணுவத்தினர் வழிவிடவுள்ளனர்.
இராணுவத்தினரால் இன்றைய தினம் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர் குறித்த ஆலயத்தினை அந்த பிரதேச மக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவுள்ளனர்.