SuperTopAds

28 வருடங்களின் பின்னா் சொந்த நிலத்திற்கு திரும்பிய மக்கள், ஆவலுடன் தம் வாழ்விடங்களை பாா்த்தனா்..

ஆசிரியர் - Editor I

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 1363 ஏக்கர் காணி நேற்று ஜனாதிபதியால் விடுவிக்கப்ப ட்டது. இதன்படி யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. 

தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது. நேற்றை  ய தினம் விடுவிக்கப்பட்ட போதும் இன்று காலையே காணி உரிமையாளர்களை பார்வையிட அனுமதிக்க ப்பட்டது.

தையிட்டி தெற்கில் j/ 249, j/250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தி னர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாறியுள்ளனர். அத்துடன் வீ டு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் 

சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களையும் வரைந்துள்ளனர். இராணுவத்தினரால் லவ்பேட்ஸ் கிளி, மீன் வளர்தும் உள்ளனர். மேலும் காணியில் வளர்த்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்  கியு ள்ளனர். எனினும் புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். 

கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. நல்ல நிலையில் உள்ள வீடுகளில் உள்ள கதவு ஜன்னல் கிறில்கள் திருடர்களின் கை வரிசையில் இருந்து பாதுகாக்க போராட வேண்டும் என 

பார்வையிட வந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.