மே தின வாழ்த்துச் செய்தி - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்

மே தின வாழ்த்துச் செய்தி - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்
உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.
நமது நாட்டில் கடந்த வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியதும் தொழிலாளர் வர்க்கமே ஆகும். அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்களும் அவர்கள்தான். நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும் நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு அணுகுமுறைகளை உரிய தரப்பு மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர்.இந்த உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் உயிரிழப்புகளும் சொல்லிமாளாதவை.அந்த நினைவுகளை முன்வைத்தே மே முதல் நாளை தொழிலாளர் தினமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்.அவைகளெல்லாம் கடந்த நூற்றாண்டு கதைகள். ஆனால் இன்றும் கூட நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவது முடிந்த பாடில்லை.
உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன்.உலகளாவிய தொழிலாளர் சக்தியான தொழிலாளர் சகோதரத்துவத்தை உருவகப்படுத்தும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்வது அந்த அபிலாஷைகளுடனேயே ஆகும்.ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை தீவிரமாக்க ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைக்கும் மக்களின் உரிமை தினமாக, உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை நாளாக கொண்டாட வேண்டும் என அறை கூவி அழைத்தது.
அந்த வகையில் இலங்கையிலும் உலகலாவிய ரீதியிலும் கொண்டாடப்படும் மே தினமானது உழைக்கும் மக்கள் அனைவரினதும் அபிலசைகள் நிறைவேற பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரிஇ பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில்இ குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்