சமஸ்டிக்கே மக்கள் வாக்களித்தனர், புதிய அரசியலமைப்பு முயற்சியை நிராகரித்தது ரெலோ..

ஆசிரியர் - Editor I
சமஸ்டிக்கே மக்கள் வாக்களித்தனர், புதிய அரசியலமைப்பு முயற்சியை நிராகரித்தது ரெலோ..

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் அறிக்கையினை தாம் நிராகரிப்பதாக தமிழ்தேசிய கூட்ட மைப்பின் பங்காளி கட்சியான ரெலோ சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர் பான தீர்மானம் இன்று ரெலோவின் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக ரெலோ ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றினையும் அனுப்பிவைத்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது. 

இலங்கை தேசிய கேள்வியாக பல தசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருப்பதும், பொதுமக்கள், தமிழ் போராளிகள் மற்றும் சிங்கள படை வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட நீண்டதோர் யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான இனப்பிரச்சனைக்கு,

இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற வரையறைக்குள் நீதியானதும், நிலைத்து நிற்க கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றிணை ஜனநாயக வழிமுறைகள் ஊடாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

இத்தகைய அரசியல் தீர்வு என்பது சுதந்திர இலங்கையில் தமிழ் தேசிய இனம் ஆனுபவித்திருக்கும் பாரபட்சம், அநீதி, மற்றும் துன்பதுயரங்களிற்கு முடிவுகட்டும் விதத்தில் எமது மரபுவழி தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி 

கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை அமைகப்பதாக இருக்க வேண்டும் என்பதிலும், இனப்பிரச்சனைக்கு அடித்தளமாக இருந்து வந்திருக்கும் ஒற்றையாட்சி முறைக்கு பதிலாக சமஷ்டி ஆட்சிமுறை என்றழைக்கப்படும் இணைப்பாட்சி 

முறையில் அமைய வெண்டும் என்பதிலும் எமது கட்சியும் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த பல தேர்தல்களில் மக்கள் ஆணையை பெற்றுள்ளது. அதிலிருந்து நாம் பின்வாங்க முடியாது. இந்த அரசியல் பின்னணியில்  இப்போது முன்வைக்கப்பட்டள்ள 

அரசியல்  தீர்வுத்திட்டம் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கையை கவனமாகவும், நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில் அதை நிராகரிப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என்.சிறிகாந்தா ஆகியோர் அதில் கையொப்பிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு