''ஏக்கிய இராச்சிய'' என்பதன் அர்த்தம் ஒருமித்த நாடு என கூறுவது அப்பட்டமான பொய்..

ஆசிரியர் - Editor I

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என கூறுவது அப்பட்டமாக தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என கூறியிருக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன், 

ஏக்ஸத் இராச்சிய என்பதே ஒருமித்த நாடு ஏக்கிய இராச்சிய என்பதற்கு ஒருமித்த நாடு என அர்த்தம் கொடுக்க முடியாது. எனவும் கூறியுள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு அங்குரார்ப்பண நிகழ் வில் கலந்து கொண்டு 

கருத்து கூறும்போதே சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறு கையில், ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல. அது ஒற்றையாட்யே. இல்லை அது ஒருமித்த நாடு என கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். 

மேலும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா புதிய அரசியலமைப்புக்கான வரைபுகளில் சமஸ்டிக் கான குணாம்சங்கள் இல்லை. ஆனால் முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளதாக கூறியுள்ளார். அவ்வாறு முன்னேற்றகரமான விடயங்கள் இருப்பின் நாம் அதனை வரவேற்கலாம். 

மேலும் அவ்வாறு முன்னேற்றகரமான விடயங்களை அரசு தராவிட்டால் வடகிழக்கு தமிழ் மக்கள் தம் அ டையாளங்களை இழக்கும் நிலையே உருவாகும். அதனாலேயே எமக்கு ஆழும் உரிமை உள்ளது என  கே ட்கிறோம், சமஸ்டி வேண்டும் என கேட்கிறோம், வடகிழக்கு இணைப்பை கேட்கிறோம். 

இதற்கு மேலதிகமாக அரசு தருபவற்றை நாங்கள் பெற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் எமது மக்கள் விரும்பும் வகையிலான தீர்வினை பெறும் இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. 

மேலும் பிரச்சினை தமிழர்களுக்கு எனவே சிங்களவர்கள் தரமாட்டார்கள் என்பது பிரச்சியைல்ல. எமது ம க்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் கேட்ளோம். மேலும் ஊடகங்கள் கூறுவதற்கும், தமிழ்தேசிய கூட்டமைப்பு கூறுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்தே பார்க்கவேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு