வடகிழக்கில் 10 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம், 4750 வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் 10 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம், 4750 வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்..

வடகிழக்கு மாகாணங்களில் 10 ஆயிரம் வீட்டு திட்டத்தில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிவஞானசோதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

மாவட்ட செயலகங்களூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி அறிக்கையொன்றினூடாகக் குறிப்பிட்டுள்ளார்.

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 4750 வீடுகள் முதல் கட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் 1500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும் 

முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதேவேளை திருகோணமலையில் 400 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும் 

அம்பாறையில் 125 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மற்றும் தமிழக அகதி முகாம்களிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு இந்த வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் வகையில் இந்த வீட்டுத்திட்ட நிர்மாண செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு