நீதிமன்றில் ஒலித்த கைத் தொலைபேசி அழைப்பு சத்தம், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் ஒலித்த கைத் தொலைபேசி அழைப்பு சத்தம், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்..

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது கைத்  தொலைபேசியை ஒலிக்க விட்ட நீதிமன்ற உத்தியோத்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிவான ஏ.ஜி. அலெக்ஸ்ராஜாவால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் முன்னெடுக்கும் போது கைபேசி அழைப்பு ஒலியை எழுப்பிய குற்றத்துக்கு நீதிமன்ற உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதுஇ நீதிபதியின் உதவியாளரின் (ஆராச்சி) கைபேசி ஒலி எழுப்பியதால் மன்றில் பரபரப்பு ஏற்பட்டது. 

நீதிமன்றப் பொலிஸ் அலுவலகரை அழைத்த மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் கைபேசியை கைப்பற்றுமாறும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதியின் உதவியாளர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரைக் கண்டித்த நீதிவான் வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஒழுக்கங்களை கடுமையாகப் பின்பற்றும் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா

தனது உதவியாளரான நீதிமன்ற உத்தியோகத்தரின் தவறையும் நீதியின் முன் சமமாகவே எடுத்து நடவடிக்கை எடுத்தார் என்று சட்டத்தரணிகள் சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு