சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்...

ஆசிரியர் - Editor I
சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்...

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை திருட வந்த குழு அல்லது நபர் வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதையடுத்து திருடுவதனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள அரசாங்க வங்கி ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியை அகற்றி வங்கிக்குள் புகுந்து பெட்டகத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியே தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வங்கிக் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து ஒருவர் அல்லது பலர் கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கி பெட்டகத்தை உடைத்தபோது வங்கியின் சமிக்ஞை கட்டைப்பு திடீரென செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட பெட்டகத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு