இராணுவ அதிகாரியின் நடை பயணம் நான்காவது நாளை எட்டுகிறது

ஆசிரியர் - Editor III
இராணுவ அதிகாரியின் நடை பயணம் நான்காவது நாளை எட்டுகிறது

இராணுவ அதிகாரியின் நடை பயணம் நான்காவது நாளை எட்டுகிறது


இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம் என்ற தலைப்பில் 24 ஆவது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற  உத்தியோகத்தர்  ஷெல்டன் பெரேரா இலங்கையை கால்நடையாக சுற்றி வருவதற்கு தீர்மானித்திருக்கின்றார்.

இதன் முதற்கட்டமாக  கடந்த 22 ஆந் திகதி திங்கட்கிழமை மத்திய முகாம் லும்பினி கோவிலுக்கு அருகில் காலை  தனது நடை பயணத்தை  ஆரம்பித்தார்.

குறித்த நடைபயணத்தை மகா சங்கரத்தினரின் ஆசியுடன் பயணத்தை தொடங்கிய அவர்  53 நாட்களுக்குள் இந்த பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதுதுடன் இந்நடைப ணத்தின் ஆரம்பமாக மத்திய முகாம் லும்பினி ஆலய முன்றலில்   கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிங்கள  தமிழ்  முஸ்லிம் மக்கள் வருகை தந்து இந்த நடை  பயணத்தில் ஈடுபடும் 24 ஆவது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற  உத்தியோகத்தர்  ஷெல்டன் பெரேராவிற்கு  மாலையணிவித்து ஆசிர்வதித்தனர்.நான்கு காரணங்களின்  அடிப்படையில் இந்த நடைபயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

அனைத்து இனங்கள் மற்றும் அனைத்து மதத்தினரிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவித்தல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல்

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருத்தல்

இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் பயணத்தின் தொடக்கத்தில் ஒரு செடியை நடுவது இந்த நடைப்பயணத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது.

கடந்த  22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  இந்த பாதயாத்திரை கல்முனைக்கு சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாளை ஆரம்பமாகவுள்ள இப்பயணம் முதல் நாள் காத்தான்குடியில் நிறைவடைந்து அங்கிருந்து அன்றைய தினம் காத்தான்குடியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில்  நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணம் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஆகும் என்பதுடன்  இந்த பயணத்தை 52 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு