1,500+ ESOFT மாணவர்கள் மதிப்புமிக்க பிரித்தானிய நிலை 3 டிப்ளோமா தகுதிகளுடன் SEG Awards மற்றும் UK Awards விருது வழங்கும் விழா 2024 இல் பிரகாசிக்கிறார்கள்!

ஆசிரியர் - Admin
1,500+ ESOFT மாணவர்கள் மதிப்புமிக்க பிரித்தானிய நிலை 3 டிப்ளோமா தகுதிகளுடன் SEG Awards மற்றும் UK Awards விருது வழங்கும் விழா 2024 இல் பிரகாசிக்கிறார்கள்!

ESOFT Metro Campus இலங்கையில் முதல் முறையாக SEG Awards மற்றும் UK Awards  விருது வழங்கும் விழாவை நடத்துவதன் மூலம் இலங்கையின் கல்வித்துறை வரலாற்றில் அதன் பெயரை பொறித்துள்ளது. இந்த நிகழ்வானது தகுதியான கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவது மற்றும் அவர்களின் முன்னேற்றதிற்கான ESOFT நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய நிலை 3 டிப்ளோமாவானது தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் அறிவியலில் துறைகளில்

வழங்கப்படுவதுடன் இது மாணவர்கள் தங்கள் சாதாரண தர  படிப்பை முடித்த பிறகு நேரடியாக பிரித்தானிய பட்டப்படிப்பிற்கு முன்னேற அனுமதிக்கிறது.

BMICH இல் நடைபெற்ற இவ்விழாவில், ESOFT இன் தலைவர்/குழு முகாமைத்துவப் பணிப்பாளரும் ஸ்தாபகருமான டாக்டர் தயான் ராஜபக்ஷ, British Council இன் இலங்கையின் நாட்டுப் பணிப்பாளர் திரு ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் மற்றும் SEG Awards மற்றும் UK Awards இன் தலைமை நிர்வாக அதிகாரி  திரு.பால் ஈலெஸ் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.


இன் நிகழ்வில் ESOFT யாழ்ப்பாண கிளையில் பிரித்தானிய நிலை 3 டிப்ளோமா கற்கைநெறியினை நிறைவுசெய்த மாணவர்களும் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு