SuperTopAds

மறைந்த தலைவர் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

ஆசிரியர் - Editor III
மறைந்த தலைவர் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

மறைந்த தலைவர் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக  கையளிப்பு 

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க    அவரது குடும்பத்தினரினால் திங்கட்கிழமை (19)   உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது உத்தியோகபூர்வமாக இக்கையளிக்கும் நிகழ்வில் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் உட்பட  மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபின் புதல்வர்  அமான் அஷ்ரப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்காக முயற்சித்த அனைவருக்கும்  குறிப்பாக தலைவரின் குடும்பத்திற்கும் நன்றியினைத் தெரிவிப்பதோடு  மறைந்த தலைவர் அஷ்ரஃப்  அவர்களுக்காகவும் பிரார்த்திப்பதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்